நாகா புராணம் - கரிகாலன்
அத்தியாயம் 1
பனிக்கொட்டிய குளிர் இரவொன்றின் கனவில் நீ வந்தாய் அதியன்.அந்தக் கனவில் உனக்கு அதியன் என்றுதான் பெயர்.வெகு நாளாகச் சந்திக்க விரும்பியவன் நீதான் என்பதை அவ்வுறக்கத்திலேயே உணர்ந்துகொள்ள முடிந்தது.
உன்னுடன் ஒரு கருப்பு நாய்க்குட்டியும்கூட வந்ததல்லவா.நீ அதை ஃபெலீஷியா என அழைத்ததாய் ஞாபகம்.பொதுவாக டாபர்மேன் வகை நாய்கள் ஆக்ரோஷமானவை.ஆனால் அதுவோ உன்னிடம் குழைந்துகொண்டிருந்தது.அதன் பார்வையில் உன் மீதான காதல் எரிந்து கொண்டிருந்தது.எத்தனை விழிகளில் விளக்கெரியச் செய்திருக்கிறாய்.
அப்போது எனக்குத் தர உன்னிடம் ஒன்றுமேயில்லை.அது அகாலம்.எங்கும் நீர்மை.கொஞ்சம் நீலம்,கொஞ்சம் பச்சையான உலகம்.அதியன் வெற்று வெளியில் நீ கை விரித்தாய்.தாமரை மலரொன்று உன் உள்ளங்கையில் விழுந்தது.ஒரு மின்னல் அம்மலரைத் தீண்டிச் சென்றது.விண்ணில் 'நாகா' அசரீரி ஒலித்தது.
உன் நாகா நான்..என் கனவு நீ..
தொடங்கட்டுமுன் 'நாகா புராணம்'
அத்தியாயம் 2
எவ்வளவு தூரம் கடந்து இந்த நாவல் காட்டிற்கு வந்திருக்கிறேன். எனக்காகவென்றால் நிச்சயம் வந்திருக்க மாட்டேன். புளிய மரத்தடியில் பருத்த பிருஷ்டங்களோடும் தடித்த உதடுகளோடும் மத்திய வயதுடையவள் விற்றுக்கொண்டிருக்கிறாள் அல்லவா அவளிடம் வாங்கியிருப்பேன்.
ஆனால் கேட்டது நாகா அல்லவா அவளுக்காக ஏழு மலைகள் ஏழு கடல்கள் தாண்டியிருக்கிறேன். விஷ ஜந்துக்களும், ஆபத்து தரும் விலங்குகளும் நிறைந்த இவ்வனத்தில் நாகாவின் பொருட்டு அலைவதில் ஓர் ஆத்ம திருப்தி இருக்கத்தான் செய்கிறது.
அவளுக்கு அனோலாக்ஸியா இருக்க வேண்டும். சாப்பிடுவதென்றால் என்னவென்றே அவளுக்குத் தெரியாது. அப்படிப்பட்டவள் ஒரு கிராமத்து சிறுமியின் அழுக்குக் கரங்களால் நாவல் கனி ஒன்றை வாங்கி சுவைத்தாள். அதன் சுவை அவளை குதூகலப்படுத்தியது. கண்கள் பிரகாசித்தன. “ Hey.. my life is like a unfinished painting" உற்சாகம் குறையாமல் முணுமுணுத்தாள். “என்னப்பா கவிதையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்ட” “ நோ.. நோ.. இது காகாவோட வார்த்தைகள்
நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா,
நாகவுக்கு லேடி காகாவென்றால் உயிர். என்ரிக் இக்லீஷியஸ், எமினம் ஏகான் மைலிசிரஸ், ப்ரூனோ மார்ஸ், டெமி லொவேட்டா, ரிஹானா, கேட்டி பெரி, அடீல் என எல்லோரையும் கேட்பாள் ஆனால் காகா மேல் மட்டும் வெறி. அவள் போட்டிருக்கும் நெயில் பாலிஷூக்காக மால்கள் தோறும் அலைவாள்.
நாகா ஒரு வல்லூறு. திடீரென்று பறந்து மறைந்துவிடுவாள். நெடுநாட்கள் பார்க்க முடியாது பழைய அலகுகள், பழைய நகங்கள், பழைய சிறகுகள் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு புதிதாய் வருவாள். புதிதாய் வாழத்தெரிந்தவள் நாகா. அவளுடைய திங்கட்கிழமையில் தவறியும் ஞாயிறின் சாயல் இருக்காது. ஆனால் ஏனோ காகாவின் வரிகளை மட்டும் முணுமுணுக்காமல் அவளால் இருக்க முடிந்ததே இல்லை. கேட்டால் நாகா வேறு காகா வேறில்லை என்பாள். காகாவின் தோழன் ஒரு பப்பில் அவளோடு சண்டைபோட்டுக்கொண்டு பாதியிலேயே எழுந்து போய்விட்டான். இது அவள் பிரபலமாகும் முன்பு. இன்று அவனால் எந்த பப்பிலும் காகாவின் பாடலை கேட்காமல் இருக்க முடியாது இல்லையா? என்பாள்.
I,'m gonna be a star
you know why
because I have nothing
left to lose...
நீயும் ஒரு நட்சத்திரம் தான் ஆனால் என்னைவிட்டு உயரே உயரே போய்க்கொண்டிருக்கிறாய்.
I'm a warrior queen live passionately tonight
காகாவின் பிரசித்திபெற்ற Marry the night- ஐ தான் அடிக்கடி ஹம் பண்ணுவாள். நாகா காகா எவ்வளவு பொருத்தம்.
நாகாவோடு இருக்கும் பகலில் புதினா மணம் மிதக்கும். நாகவோடு கழிக்கும் இரவில் மழைநீர் வழிந்தோடும் மண்ணின் வாசனை மணக்கும்.
என்னுடைய நாகாவுக்காக நான் நின்றுகொண்டிருக்கும் இந்த நாவல்காடு புண்ணியத்தலம். அவள் உமிழ்நீர் பட்ட இடத்தில் பசுமை பூக்கும். அவள் கண் மூடும் வேளையில் தான் பூமியில் இரவு கழிகிறது. அவள் எப்போது எதைக்கேட்பாள்? எப்போது எங்கு அழைப்பாள்? எப்போது எப்படி திட்டுவாள்? எப்போது முத்தமிடுவாள்? என்று எதையும் அனுமானிக்க முடியாது.
நாகாவிடம் தோற்கப்பிறந்தவன் நான். திடீரென்று பாவ்லோ கொய்லோவின் ஆல்கமிஸ்ட் கேட்பாள், வின்டர்ஸ் சொனாட்டா கொரியன் சீரியல் கேட்பாள். அவள்தான் என்னை தேட வைத்தவள்.
தேடிக்கொண்டிருக்கிறேன் என் நாகாவை.
(புராணம் வளரும்)

No comments:
Post a Comment