Tuesday, January 7, 2014

உபரி வடைகளின் நகரம்-விமர்சனம்

உபரி வ​டைகளின் ​நகரம் - 
சமகால கவி​தைக் குரல்
கரிகாலன்

            தமிழ்  ​மொழியின் ஆதி இலக்கிய வடிவம் கவி​தை.  இப்​போதும் கூட அதன் சீரிள​மைத்திறன் வியக்கும் வண்ணமாக​வே உள்ளது. நாம் வாழும் இக்காலத்தில் கவி​தைக்கான  தளம் விரிவ​டைந்திருக்கிறது. முகநூல்களிலும் , குறுஞ்​செய்திகளிலும் கவி​தைகள் காணக்கி​டைக்கின்றன. நள்ளிரவுக்கவிஞர்கள் அன்​றைய தினத்தின் கசப்புக​ளையும் , இனிப்புக​ளையும் அன்றன்​றே ​கொட்டித்தீர்க்கின்றனர். கவி​தைக்கு ​நெருக்கமான ஒரு வடிவத்​தை இவ்வூடகங்களின் வழி​ வடிகாலாக்கியிருப்பது இன்​றைய கார்ப்ப​ரேட் பண்பாட்டின் ஓர் அம்சம்.

            இ​தே ​வே​ளையில் , அதிகார மதிப்பீடுகளிலிருந்து விலகியும், அ​டையாள அழிப்பிற்குத் தப்பியும் , தங்கள் பார்​வை​யை வரித்துக்​கொண்ட இளம் கவிஞர்கள் இருக்க​வே ​செய்கிறார்கள். நமது பன்முகத்தன்​மை ​​கொண்ட சமூகக் குழுக்களின் பிரதிநிதிகள் இவர்கள். சமகாலத்தில் எதிர்​கொள்ளும் அரசியலிலிருந்து , பண்பாட்டு மதிப்பீடுகளிலிருந்து கருக்​கொண்ட​வை இவர்களது கவி​தைகள். இ​சை , ​செல்மா பிரியதர்ஷன் , இளங்​கோ கிருஷ்ணன் , முத்து​வேல் , ​வெய்யில் , தூரன் குணா , ம​னோ ​மோகன் என நீள்கிறது இத்த​கைய இளம் கவிகளின் பட்டியல். இவர்களது ப​டைப்புகள் உலகின் சிறந்த கவி​தை வரி​சையில் இ​ணைத்து ஆராதிக்கப்பட ​வேண்டிய ஆற்றலும் , அழகும் ​கொண்ட​வை. இவ்வரி​சையில் , லிபி ஆரண்யா தவிர்க்க முடியாதவர்.

            இவரது இரண்டாவது ​தொகுப்பான 'உபரி வ​டைகளின் நகரம்' மூன்றாம் உலகின் அரசிய​லை அழகியல் கலந்த உரத்த ​தோனியில் விவாதிக்கிறது. ​பொதுவாக , ​வெடிப்புறப் ​​பேசுவது ​பெரிதன்று. அ​தை ந​கைச்சு​வை உணர்வுடன் கூறுவது சாமர்த்தியமானது. ந​கைச்சு​வை​யை க​லை வடிவமாக்குவது அ​தைவிடவும் முக்கியமானது. ஏ​னெனில் ,  கலகத்தின் இன்​னொரு வடிவம்தான் ​நையாண்டி. இந்தக் க​லை ​கைவரப்​பெற்றவராக லிபி திகழ்கிறார்.

            வணிகமயமாகியிருக்கும் கல்வி​யை , அதிகார சமூகம் ​கையளித்திருக்கும் பண்பாட்டு மதிப்பீடுக​ளை , வளர்ச்சி​யைக் கட்ட​​மைப்பதில் காவு​கொடுக்கப் பட்டிருக்கும் பழங்குடிகள் உள்ளிட்ட எளிய மக்களின் நலன்க​ளை க​லைத் ​தேட்டத்​தோடு விவாதிப்பதில் கரிசனம்  ​கொண்ட​வைகளாகத் திகழ்கின்றன இவரது  கவி​தைகள்.

            'ஒரு நல் ​மேய்ப்ப​னை / உங்கள் மந்​தைக்குத் திருப்பும் / துர் எண்ணத்​தைக் ​கைவிடுங்கள்' எனக்கூறும் ​போதும் , ' பற​வைகள் வந்தமர முடியாத​படிக்கு / துயரத்தின் கி​ளை​யை விரித்திருக்கும் ​போன்சாயறியும் / நமது குழந்​தைகளின் வலி​யை ' என ​வேத​னைப் படும்​போதும் குழந்​தைகளின் சுதந்திர உல​கை நம் நவ கல்வி மு​றை அதன் ​​கோரப்பற்களால் எவ்வாறு கவ்விப் பிடித்திருக்கிறது என்ப​தை அறிய முடியும்.

            இவரிடம் பாவ​னைகள் இல்​லை. ' அ​டே ஒழுக்கசீலா /  2000 வருஷமாய் ஜல்லியடிக்கும் உங்கள் அறச்சா​லையில் / ஒரு ஸ்கூட்டிக்கு வழிவிடுத​லை விடவும் / ஆகச்சிறந்த அறமுண்டா ​சொல் /  அப்படி​யே ஒரு 5000 ​சொல்'. மது விடுதிகளும் ஸ்கூட்டியில் இளம்​பெண்கள் வி​ரையும் சா​லைகளும் பகிரப்படாமல் எப்படித்தான் நம் சமகாலத்​தை விவரிப்பது. நம் காலத்திற்கு ​நெருக்கமானதாக இருக்கின்றன இவரது கவி​தைகள்.

            நமது வாழ்​வை உரசிப்பார்க்கும் அரசியல் முடிவுகள் எதுகுறித்தும் அக்க​ரையில்லாத நடுத்தர வர்க்க ம​​னோபாவம் முடிவுக்கு வந்து​கொண்டிருக்கிறது. அணு உ​லைகளுக்கு எதிர்ப்பு , ​தேசிய இனங்களின் விடுத​லைக்கு ஆதரவு , ​பெண்கள் மற்றும் தலித்துக்கள் மீதான வன்மு​றைகளுக்கு எதிர்ப்பு என வீதியில் இரங்கிப் ​போராட படித்த நடுத்தர இ​ளைஞர்கள் முன்வரும் விழிப்புணர்வு பரவலாகி வருகிறது. இத்த​கைய மனநி​லை இத்​தொகுப்பிலும் ​செயல்பட்டிருப்ப​தை அவதானிக்க முடிகிறது.

            இவ்வாறு கூறுவதால் லிபியின் கவி​தைகள் அரசியல் உள்ளடக்கம் ​கொண்ட ​வெற்று ​கோஷங்கள் என சுருங்கிப் புரிந்து​கொள்ளக் கூடாது. கவி​தைக் கட்ட​மைப்பின் நுணுக்கமும் , பருண்​மையான இ​ழைகளால் ​நெய்யப்பட்ட க​லை நயமும் , கூர்​மையான ​சொற்​சேர்க்​கைகளும் , சுருங்கக்கூறி ​பொருள் விரிக்கும் வித்​தையும் , க​லை அ​மைதியும் கூடிய ​தொழில்நுட்பம் பழகிய​​வை இக்கவி​தைகள்.

            நமது ஒருநாளின் மின்னி ம​றையும் கணங்களிலிருந்து தனது கவிச்சித்திரத்​தை உருவாக்குகிறார் லிபி. இக்கவி​தைகள் உருவாக்கும் சலனங்கள் காத்திரமான​வை. வார்த்​தைகள் உருவகங்களாகி நம்​மை வாழ்வின் புதிருக்குள் பயணிக்க ​வைப்ப​வை. நுட்பமான வினாக்க​ளை உருவாக்க ​வைப்ப​வை. அ​மைதி​யை அழிப்ப​வை. கவி​தைக்கும் , கவி​தை ​போன்ற ஒன்றிற்கும் இ​டை​யே உள்ள ​வேறுபாட்​டை துல்லியமாக உணர ​வைப்ப​வை.

            லிபி குறித்து சில ​மெல்லிய விமர்சனங்க​ளையும்  பகிர்ந்து ​கொள்ள ​வேண்டியிருக்கிறது. கவி​தை​யை மிகவும் எளி​மைப் படுத்துவதிலும் , அ​தை உ​ரைந​டைக்கு அருகில் ​கொண்டு வருவதிலும் உள்ள ஆபத்துக​ளை கவிஞர்  உணர ​வேண்டும். தர்க்கங்க​ளை க​​லைப்பதும் , வார்த்​தைக​ளைக் குறியீடாக்குவதும்  , யதார்த்தம் கடந்த யதார்த்தங்க​ளை உருவாக்குவதும் மாய யதார்த்தங்க​ளைப் பு​னைவதும் , இதுவா ? அதுவா? எனும் இருண்​மை​யை ஏற்படுத்துவதும்  கவி​தை​யை ​மேன்​மையுரச் ​செய்யும் நுட்பங்கள். இவ்வ​கையில் லிபி கடக்க ​வேண்டிய தூரங்கள் இருக்க​வே ​செய்கின்றன. ஆறுதல் என்ன​வென்றால் , இத்தி​சையில் இவர் பயணிப்பதற்கான அ​டையாளங்கள் இத்​தொகுப்பி​லே​யே காணப்படுவதுதான். ​மேலும் , லிபியின் எள்ளல் க​லை இன்னும் ​செரிவானதாக , இன்னும் ​மேன்​மையானதாக ஆகும் ​ ​போது இவரது க​லை உயரம் கூட வாய்ப்பிருக்கிறது. இரட்​டைப் புலவர்கள் காலத்திலிருந்து நாம் இக்க​லையில் வல்லவர்கள் என்ப​தை மறந்துவிடக்கூடாது. இன்று , புதினங்களின் வரிகளில் கவித்துவத் ​தெறிப்புகள் நி​றைந்திருப்ப​தைக் காண்கி​​​றோம். இ​தைக் கவிஞர்கள் சவாலாக எதிர்​கொள்ள ​வேண்டும்.

            கடவுளின் அரிய​​ணை காலியாகலாம். ஒரு​போதும் கவிதையின் சிம்மாசனம் காலியாகப் ​போவதில்​​லை என்ப​தை நம்காலத்துக் கவி​தைகள் நிரூபித்துக் ​கொண்டிருக்கின்றன. லிபி ஆரண்யா ​போன்ற இ​ளைஞர்களின் இயக்கம் இதற்கு உதவியாக அ​மைந்திருக்கிறது. நமது சமகாலக் கவி​தையின் வ​கைமாதிரியாக​வோ அல்லது அதிலிருந்து விலகி​யோ ஒரு முக்கியமான பாத்திரத்​தை  'உபரி வ​டைகளின் ​நகரம்' ​தொகுப்பு வகிக்கிறது. நமது சமூகத்​தையும் , நமது கவி​தை​யையும் விளங்கிக்​கொள்ள எத்தனிப்பவர்களுக்கான திறப்புக​ளை  இந்த கவி​தைகள் உள்ளடக்கியிருக்கின்றன. ​தேடுபவர்க​​ளே எப்​போதும் கண்ட​டைபவர்களாக இருக்கிறார்கள்.

உபரி வ​டைகளின் நகரம்
லிபி ஆரண்யா
வி​லை ரூ.50/-
சந்தியா பதிப்பகம்

​​சென்​னை - 83

No comments:

Post a Comment